பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா சொல்வது எல்லாமே பொய் என்றும், பூர்ணிமா ஒரு பொய்க்காரி என்றும் அவருடன் பணிபுரிந்த சக பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்கள் பலர் வெளிப்படையாக பல மோதல்களில் ஈடுபட்டு வருவதால், ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கின் போது பேசிய பூர்ணிமா ரவி தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்தார். அதில், காலேஜ் முடித்ததற்கு பிறகு ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது.
அந்த கம்பெனியில் எட்டு மாதம் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால், திடீர் என்று என்னை வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள். வீட்டுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்பதால், பல இடத்தில் வேலை தேடி அலைந்தேன். அப்போதுதான், ஒரு டிஜிட்டல் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் தங்குவதற்கு வீடு இல்லை, அப்போது, தான் 11 ஆண்கள் தங்கி இருக்கும் வீட்ல, நானும் பணம் கொடுத்து தங்கினேன்.
அந்த பசங்களால எனக்கு எந்த தொல்லையும் இல்ல, ஆனால், அக்கம் பக்கத்தில் சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் தப்பாக பேச ஆரம்பிச்சிட்டாக என்று கூறியிருந்தார். பூர்ணிமா கூறியது இணையத்தில் வைரலான நிலையில், பலரும் பூர்ணிமாவின் கதையை கேட்டு பூர்ணிமா உண்மையாகவே ஒரு இன்ஸ்பையரிங் women (பெண்) என்று பேசி வந்தனர்.
இந்நிலையில், கடந்து வந்த பாதை டாஸ்கிங் போது பூர்ணிமா இரண்டு பெண்களுக்கு வீடு கிடைக்காததால் 11 ஆண்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் சேர்ந்து தங்கியிருந்தேன் என்று கூறியுள்ளது குறித்து அவருடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் ட்விட்டரில் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.அதில்,
“இரண்டு பொண்ணுகளுக்கு வீடு கிடைக்கல, ஆனால், 11 ஆண்களுடன் ஒரு பெண்ணுக்கு வீடு கிடைச்சிதா, இது லாஜிக்கே இல்லாம இருக்கே. எங்க ஆபீஸ்ல தான் ஒர்க் பண்ணுனா அந்த நேரம் 4,5 பாய்ஸ் ஓட ஊர்சுத்தி பணம் ஏமாத்திட்டதால எச்ஆர் அவரை வேலைய விட்டு தூக்கிட்டாங்க.
அதுக்கு அப்புறம் யூ ட்யூப்பர் ஆனா, அங்கயும் அவளுக்கு ஸ்பான்சர் பண்ணுன சேனல்கிட்டையும் பணம் சுட்டுட்டா மோசமான பொய்காரி அவ” என்று பூர்ணிமாவுடன் பணிபுரிந்த பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.