பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – குன்னூர் விரைகிறார் தமிழக முதலமைச்சர்

bipin-rawat-in-the-helicopter-involved-in-the-accident
military chopper with cds rawat others on board crashes

பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனி விமானத்தில் குன்னூர் விரைகிறார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் மலைப்பாதையில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது.

ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டது

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானத்தில் குன்னூர் விரைகிறார்.

bipin-rawat-in-the-helicopter-involved-in-the-accident
bipin rawat in-the helicopter involved in the accident

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் விரைகிறார்கள்.

Total
0
Shares
Related Posts