கேரளா மாநிலத்தில் பறவைக்காச்சல் அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து வரும் ( bird flu ) கோழிகளுக்கு தமிழகத்தில் தடைபோடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கடந்த வாரம் திடீரென உயிரிழந்தன. இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்த சுகாதாரத்துறையினர் அதனை சோதித்து பார்த்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது .
இறந்த அனைத்து வாத்துகளுக்கும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
, கேரளாவில் வேகமாக பரவி வரும் இந்த பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Also Read : அமெரிக்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து கோர விபத்து..!!!
அதனபடி கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே தமிழக கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனை செய்கின்றனர்.
கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் பிற மாநில வாகனங்கள் ( bird flu ) அனுமதிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி வேறு மாநிலத்தில் இருந்து வரும் எந்த ஒரு விளங்கும் தற்போது தமிழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.