bjp candidates list அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலானது நேற்று (20.03.2024) முதல் ஆரம்பமாகி உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகியவை நேற்றும், இன்றுகாலையுமாக தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் போன்றவற்றை அறிவித்து விட்டன.
தற்போது, தனிக் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுbjp candidates list பேச்சு வார்த்தையை கடந்த சில தினங்களாக தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே, புதிய நீதிக்கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தேவனாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை முடித்துள்ள பாஜக, யாருமே எதிர்பாராத வகையில் பாமகவுக்கும் 10 தொகுதிகளை தந்து அவர்களோடும் கூட்டணியை இறுதி செய்தது.
அதே போல, இழுபறியில் இருந்த ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பி.எஸ். ஆகியவற்றுடன் இன்று இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையை துவக்கிய பாஜக, ஜி.கே வாசனின் தமாகாவுக்கு மட்டும் 3 தொகுதிகளை ஒதுக்கி அந்த இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஆனால், ஓ.பி.எஸ். அணியினருடன் கூட்டணி பேச்சு வார்த்தை இன்னும் நிறைவடையாத நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
அதன்படி, “தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்குமான கூட்டணி பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாகவும், அதில், 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் தங்கள் வேட்பாளரை நிறுத்தும்” என செய்தியாளர்களிடம் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடbjp candidates list வாய்ப்புள்ளதாகவும், வேட்பாளர் பட்டியல் இன்று எ ந்நேரமும் வெளியிடப் படலாம்” என்றும் கூறினார்.
இன்னும் சிறிது நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படவிருக்கும் நிலையில், சரவெடிகளோடு தயாராக இருக்கிறது சென்னையில் உள்ள கமலாயலம்.