டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28 ம் தேதி திறக்கப்பட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
இதையடுத்து திமுக. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர் கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், பிரபல இயக்குனரான பா.ரஞ்சித் (P Ranjith) குடியரசுத் தலைவரை அழைக்காதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி பாகுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தீய வழக்கம் தொடர்கிறது.
பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாட்டின் முதல் குடிமகனை அழைக்காதது கண்டனத்திற்குரியது. அரசியல் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமாக பாஜக செயல்பட்டு வருகிறது என்றும் நவீன தீண்டாமை தொடர்கிறது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.