தமிழ்நாட்டு உரிமை பிரச்னையை, மத்தியில் ஆளும் அரசு தீர்க்கவில்லை , தமிழ்நாட்டில் (TNBJP) பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தபோது, அங்கு பல்லாயிரக்கணக்கில் தொண்டர்களும், பொதுமக்கள் திரண்டனர்.அப்போது எழுச்சி உரையாற்றிய இபிஎஸ் கூறியதாவது :
பாஜகவில் புதிதாக தலைவர் ஒருவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி.. இறங்கும்போது பேட்டி; பேட்டி கொடுப்பதுதான் அவர் வேலை
Also Read : https://itamiltv.com/4-crore-caught-in-the-train-explanation-of-the-election-officer/
டெல்லியில் இருந்து விமானத்தில் தலைவர்கள் வருகிறார்கள்; ரோடு ஷோ நடத்துகிறார்கள்; ரோட்டில் பயணம் செல்வதால் என்ன பயன்?; அதனால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?
எத்தனை தலைவர்கள் வந்து சென்றாலும், பேட்டி கொடுத்தாலும் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது
“பாஜகவில் புதிதாக தலைவர் ஒருவர் வந்திருக்கிறார்; பேட்டி கொடுப்பதுதான் அவர் (TNBJP) வேலை; விமானத்தில் ஏறும்போது பேட்டி; இறங்கும்போது பேட்டி , பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார்; உழைக்கிறவர்களுக்கே இங்கே மரியாதை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.