Vellum Sanayagam-நாள்தோறும் கொள்கை உரம் வலுப்பெறும் இளம் காளையாகத்தான் சகோதரர் திருமாவளவன் இன்றைக்கும் ஜனநாயகம் காக்க இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேதசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,
சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின்,
சட்டக்கல்லூரி மாணவராக – மாணவர் தி.மு.க.வில் பணியாற்றிய காலத்தில் இருந்தே சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களை அவர் எனக்கு தெரியும்.
அப்போதே கல்லூரி மேடைகளிலும் – கழக மாணவரணி மேடைகளிலும் அவரின் பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும்.
இதையும் படிங்க :ADMK Report-”பிப்.5 முதல்..” அதிரடி காட்டிய எடப்பாடி!
அன்று கழகத்திற்குள் முழங்கினார். இன்று கழக கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார். எனக்கு தோளோடு தோள் நிற்பவர் திருமாவளவன் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதனால் தான் தமிழ்நாட்டில் பொறுத்தவரை பாஜகவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த அவர்,
தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது, அகில இந்திய அளவில் வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் இண்டியா கூட்டணி.
இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களை காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது.
இதுதான் நமது இலக்கு.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பு இருக்காது. ஜனநாயகம் இருக்காது.
மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது.இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நம் கண் முன்பே ஜம்மு காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றினார்கள்.
உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பாஜக ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1751128803001446911?s=20
தொடர்ந்து பேசிய அவர் சமூகநீதி – சமத்துவச் சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக
சகோதரர் தொல். திருமாவளவன் இந்த ‘வெல்லும் ஜனநாயகம்‘ மாநாட்டை கூட்டியிருக்கிறார்.
“வெல்லும் ஜனநாயகம்” என்று சொன்னால் மட்டும் போதாது! நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும்!
இதுக்கான கட்டளையை பிறப்பிக்கத்தான் இந்த மாநாட்டை கூட்டி, சர்வாதிகார பா.ஜ.க. அரசை தூக்கி எறிவோம்!
ஜனநாயக அரசை நிறுவுவோம்! என்று சபதம் ஏற்று மிக முக்கியமான 33 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றியிருக்கிறார் சகோதரர் திருமாவளவன் அவர்கள்!
இந்த சபதமும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி என்று (Vellum Sanayagam) முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.