டெல்லி பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல்(vijay goel )பெண் பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் மாடல் டவுனில் உள்ள ஒரு பூங்காவில் தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல்(vijay goel )கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் (vijay goel),தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, தத்தெடுப்பு மையங்களைத் தொடங்குவது மற்றும் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பு தடுப்பூசிகள் கிடைப்பது குறித்த பிரச்சினைகள் குறித்து கோயல் பத்திரிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அதனை ஒரு பெண் செய்தியாளர் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் கோயல்(vijay goel) அனைவரது முன்னிலையில் அந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.