கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு கேசவ விநாயகம் ஜி அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு A.P.முருகானந்தம் ஜி அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் திரு S.R.சேகர் ஜி அவர்களின் ஒப்புதலுடன் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டல் தலைவராக செயல்பட்டு வந்த திரு R.சதீஷ் அவர்கள் கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியினுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பண்டிகைக் காலத்தில் உயரும் சமையல் எண்ணெய் விலை..!!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில் தமிழக பாஜகவில் உள்ள நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.