பாஜக ஆதரவாளர்கள் முகநூல் எழுத்தாளருமான மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரை கைது செய்யவிடாமல் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஜக ஆதரவாளரும் எழுத்தாளருமான மாரிதாஸ், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படை தளபதி உட்பட பதிமூன்று பேர் ஹெலிகாப்டர் விபத்தின் காரணமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் திக மற்றும் திமுக ஆதரவாளர்கள் கேலி செய்யும் விதமாக பதிவிடுகின்றனர் என்றும் பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை” எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்யப்போவதாக கிடைத்த தகவலை அடுத்து மாரிதாஸ் வீட்டில் பாஜக நிர்வாகிகள் குவிந்தனர். கைது செய்ய வந்த காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவரது கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.