மகளிர் உரிமைத் தொகையை பாஜக நிர்வாகி குஷ்பூ பிச்சை என்று விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் (bjp vanathi srinivasan) விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும்,தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய குஷ்பூ தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சைப் போட்டால் திமுக-வுக்கு அவர்கள் வாக்களிப்பார்களா?” என பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ”இந்த பூச்சாண்டி வேல எல்லாம் என்னிடம் காட்டாதீங்க..” குஷ்புவின் ஒற்றை வீடியோ!
நடிகை குஷ்புவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.இந்த நிலையில்,நாமக்கல், திருச்செங்கோடு சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் குஷ்புவின் உருவ பொம்மை மற்றும் குஷ்பு படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மகளிர் உரிமைத் தொகையை (Magalir Urimai Thogai) கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இப்படியான சூழலில் மகளிர் உரிமைத் தொகையை பாஜக நிர்வாகி குஷ்பூ பிச்சை என்று விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாய்மார்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாயை பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டு விடுவார்களா? என்ற குஷ்பூ பேசியது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்து வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
“குஷ்பு தமிழ் பேசுவதே பெரிய விஷயம். வேறு மொழி பேசக் கூடியவர் என்பதால், வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் பேசியிருப்பார். அதனால், அவரது வார்த்தையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை”என்று தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கி வழங்கி வருவதாக குற்றம்சாட்டினார்.