வேலூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி ( Rowdy kili ) (எ) சதீஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நெடுஞ்சாலையில் இளைஞர் கத்தியைக் காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணையில் இடப்பட்ட போலீசாருக்கு திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது .
போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ரவுடி கிளி (எ) சதீஷ் என்பது தெரியவந்துள்ளது . இவர் தற்போது பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவராக இருப்பதாகவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடி கிளி (எ) சதீஷ் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ( Rowdy kili ) தற்போது அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.