சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19- தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தெடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வெடிகுண்டு எதுவும் இல்லை என போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.