Email Bomb threat to Karnataka : ரூ 20 கோடி வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில் பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏப்ரல் 1-ம் தேதி பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட் அருகில் செயல்பட்டு வந்த ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரபல உணவகத்தில் குண்டு வெடித்தது.
இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : May 1 Gold Rate : திடீர் சரிவில் தங்கம் விலை! மாத தொடக்கத்தில் இன்ப அதிர்ச்சி!
மின்னஞ்சல் மூலம் ஷாஹித் கான் என்பவர் பெயரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், உள்துறை அமைச்சர் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில், “வரும் சனிக்கிழமை மதியம் 2.48 மணிக்கு பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள் மற்றும் பேருந்துகள், ரயில்களில் வெடிகுண்டு வெடிக்கும்.
குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பு மிரட்டலால் குழந்தைகளை உடனே வந்து பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதில், “அன்புள்ள பெற்றோர்களே, சில எதிர்பாராத பாதுகாப்பு காரணங்களுக்காக, நாங்கள் பள்ளியை சீக்கிரமாக மூட வேண்டியுள்ளது. குழந்தைகளை வந்து அழைத்துச் செல்லுங்கள்.. நாளை வழக்கம் போல் பள்ளி தொடங்கும்” என்று பள்ளியிலிருந்து செய்தி வந்தது.
இதைக் கண்டதும் பெற்றோர் மிகுந்த அச்சத்துடன் உடனடியாக விரைந்து அவரவர் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Email Bomb threat to Karnataka..
இதையும் படிங்க : நடராஜனுக்கு வாய்ப்பு மறுப்பு – சரத்குமார் வருத்தம்!