கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் முகமது அலி. இவரது மகன் ஆறாம் வகுப்பு படித்துவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் இருந்த குளிர்பதன பெட்டியில் இருந்து ஐஸ்கிரீமை (ice cream) எடுத்து சாப்பிட்டுள்ளார் அந்த சிறுவன்.
இதனால், சிறுவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக சிறுவனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதையடுத்து, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், அந்த அறிக்கையில் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் (ice cream) அம்மோனியம் சல்பர் என்ற ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த ஐஸ்கிரீம் அங்கு எப்படி வந்தது? அதனை யார் வாங்கி வைத்தது? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது முகமது அலியின் சகோதரரியான தாஹிரா என்பவர் அந்த ஐஸ்கிரீமை குளிர்பதனை பெட்டியில் வைத்தார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், தாஹிராவை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அந்த ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்ததால் சிறுவன் உயிர் இழந்தது தெரிய வந்தது. அண்ணன் முகமது அலியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தாஹிராவுக்கும் முகமது அலியின் குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில், அவரது அண்ணன் தாஹிராவை பைத்தியம் என்று திட்டியதாக கூறப்படும் நிலையில், இதனால் ஆத்திரமடைந்த அவர் அண்ணன் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கில் சிறுவனுக்கு ஐஸ்கிரீமில் விஷத்தை வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.