#BREAKING | தமிழ்நாடு மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி. அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்( M. K. Stalin) கண்டனம்!
தமிழ்நாடு மாணவர்களுக்கு துணை நிற்போம்:
ஏ.பி.வி.பி. அமைப்பினருக்கு முதலமைச்சர் கண்டனம்! பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட! டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களை கோழைத்தனமாக தாக்கி பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏ.பி.வி.பி. அமைப்பினரின் செயல் கண்டனத்திற்குரியது.
அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பாஜகவுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது மிகவும் கொடுமையானது.
மேலும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம்JNU பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.