சந்திரயான் – 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் கடந்த 5ஆம் தேதி நுழைந்தது.
சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த பிறகு, ஆகஸ்ட் 6, 9, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் செயற்கைக்கோளில் சுற்றுப்பாதையின் வேகம் குறைக்கபட்டு ஆகஸ்ட் 17 அன்று விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரின் பிரிக்கப்பட்டது.
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இதை நேரலையாக ஒளிபரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் சந்திரயான் 3′ நிலவில் இறங்கும் இடம் தற்போது துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.04 மணிக்கு நிலாவில் தரை இறங்குகிறது, இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி தொடங்கும்