இரட்டை இலைக்கு உரிமை கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஈபிஎஸ் தரப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். வருகின்ற 2026ஆம் ஆண்டு வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அனல் பறக்கும் eps மற்றும் ops பிரச்சாரம்:
இதனை தொடர்ந்து தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு பாஜக முழு ஆதரவு அளித்து வருகிறது.
இந்த நிலையில் தான் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் நான் தான் என்று எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து இருவரும் தேர்தல் பணிக்குழுவையும் நியமித்துள்ளனர்.
மேலும் இரு தரப்பும் போட்டியிட மும்மரமாக ஈடுபட்டுள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வியும் மேலும் முடக்கப்பட வாய்ப்புள்ளதா என்றும் அரசியல் அரங்கில் கேள்விகள் எழுந்து வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி தரப்பு:
இந்நிலையில் ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். இரட்டை இலை சின்னத்திற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்தது.இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அரிமா சுந்தரம் முறையீடு செய்தார்.
கையெழுத்தை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்:
இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
உடனே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு உங்களது கோரிக்கையை தெரிவித்து விட்டீர்களா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, தகவலை பகிர்ந்து கொண்டோம் என்று பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இரட்டை இலைக்கு உரிமை கோரி மேல்முறையீடு:
இந்த நிலையில் இரட்டை இலைக்கு உரிமை கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு பழனிசாமி அறிவுறுத்த கோரியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.