2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட் உரையாற்றினார்.
இதில், நிதிச் சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதாவது, நாட்டில் உள்ள சுமார் 1.5 லட்சம் தபால் அலுவலகங்களும் வங்கி அமைப்புக்குள் கொண்டுவரப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நிதிச் சேவைகள் அனைவருக்கும் சென்றடையும். குறிப்பாக, தபால் அலுவலக கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகள் இடையே நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், சீனியர் சிட்டிசன்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள் எனவும், நிதிச் சேவைகள் அனைவருக்கும் சென்று சேரும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.