தோசை பிரியரா நீங்க.. அப்போ தெலங்கானாவில் விற்பனை செய்யப்படும் தங்க தோசை (golden dosa) ஒருமுறை try பண்ணி பாருங்க..
மசால் தோசை, கேரட் தோசை, ஆனியன் தோசை, தக்காளி தோசைனு விதவிதமான தோசை சாப்பிட்டுருப்போம். ஆனா யாராவது தங்க தோசை (golden dosa) சாப்பிட்டிருக்கோமா? இந்த காஸ்ட்லியான தங்க தோசை எங்க கிடைக்கும் என்று தெரியுமா..
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்ஜாரா மலைப்பகுதியில் உள்ள ஹவுஸ் ஆப் தோசை உணவகத்தில் தான் இந்த அதிக விலை கொண்ட தங்க தோசை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தோசை 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அப்பகுதியில் உள்ள ஒரு நல்ல உணவகத்தில் சாதாரணமாக ஒரு தோசை ரூ.30 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், இந்த தங்க தோசை மட்டும் ரூ.1000ற்கு விற்பனை செய்யப்படுகிறது. 1000 ரூபாய்கு விற்பனையானாலும் ஏராளமானோர் இந்த தங்க தோசையை விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக, அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தான் இத தங்க தோசையை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தங்க தோசை செய்யும் வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தோசையை தவாலில் ஊற்றிய பிறகு, நெய் ஊற்றுவது போல தங்கத்தை கரைத்து தோசையின் மீது ஊற்றுகின்றனர். இந்த தங்க கரைசலுக்கு தான் இவ்வளவு விலை அதிகம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அந்த தோசைக்கு இணையாக வறுத்த முந்திரி, பாதாம் சுத்தமான நெய் மற்றும் பல வகையான சட்னிகளும் வழங்கப்படுகிறது என்றும், வறுத்த வேர்கடலை சட்னி, இட்லி பொடியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர் தங்க தோசை சாப்பிட்ட வாடிக்கையாளர்கள்.
நாள் ஒன்றுக்கு இந்த தங்க தோசை குறைந்தது 6 முதல் 8 தோசைகள் விற்பனையாகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், அந்த உணவகத்தில், பல புது வித உணவுகளும் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உணவு நியூயார்க்கில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் விற்கப்பட்ட பிரெஞ்ச்சு பிரையாகதான் இருந்தது. இந்த பிரெஞ்ச்சு பிரை 200 டாலர் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது.