வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட முதல்வர் ஸ்டாலின் (C.M stalin) இன்று இரவு புறப்படுகிறார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு வெளிநாடு புறப்படுகிறார்.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று இரவு 9.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் முக ஸ்டாலின் துபாய் செல்கிறார்.
அங்கிருந்து சுவீடனுக்கு செல்லும் முதல்வர், அதனைத் தொடர்ந்து ஸ்பெயினுக்கு செல்கிறார். ஸ்பெயின் சென்ற உடன், அங்குள்ள பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களை சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் மொத்தம் 10 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 7, 8-ந் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.
அதில், ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கங்குவா: தலையில் கொம்பு, நெஞ்சில் ரத்தம்!- மிரட்டும் புதிய போஸ்டர்
எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணி தயாரிப்பு, வாகன தயாரிப்பு, மின்சார வாகன தயாரிப்பு, விண்வெளி, பாதுகாப்பு, தரவு சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.
இந்த நிலையில் மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் (C.M stalin) வெளிநாட்டு ஸ்பெயின் நாட்டிற்கு செல்கிறார்.
இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, முதல்வர் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த 10 நாட்கள் சுற்றுப்பயணத்தில், தமிழகத்துக்கு மேலும் பல வெளிநாட்டு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது