TNCabinet–சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
முதல்வர் வெளிநாட்டு பயணம்:
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் ஜனவரி 28ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக்கூட்டம்:
இந்த நிலையில் ,சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளது.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து அமைச்சர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க :http://Thiruma condemn-இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல்..!
அதோடு பிப்ரவரி 2வது வாரத்தில் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.
ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் :
கடந்த ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநர் உரையின் போது தமிழக அரசு வழங்கிய உரைக்கு ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
அதன் பின்னர் 90க்கும் மேற்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த மறுப்பு தெரிவித்து மாற்றி வாசித்த சம்பவம் நடைபெற்றது.
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநர் இருக்கும் போதே அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749667562684882970?s=20
இதனால் ஆளுநர் பாதியிலேயே அவையிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் இந்த முறை சட்டப்பேரவை கூட்டத் தொடரில்(TNCabinet) ஆளுநரை அழைக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை:
இதனை தொடர்ந்து தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட் தயாரிப்பு வேலைகளும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் துறை ரீதியாக அதன் விவரங்களை முதலமைச்சர் கேட்டறிவார். ஒவ்வொரு துறையிலும் எந்தெந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்,
அதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசனை நடைபெறும். அதேபோல், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.