நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உரிய சிகிச்சைக்கு பின் கேப்டன் விஜயகாந்த் பூரண குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன் வீடு திரும்பிருதார் .
இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்
பூரண நலத்துடன் இருக்கிறார் பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் என தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.