ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக போடப்பட்ட சந்தையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் வைப்பது , ஸ்டார் தொங்க விடுவது , கேக் செய்வது என இப்போதிலிருந்தே பண்டிகை கலைக்கட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக போடப்பட்ட சந்தையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்தில் மக்கள் அதிகளவில் இருந்த நேரத்தில் சவூதி அரேபிய மருத்துவர் ஒருவர் திட்டமிட்டு கண்மூடித்தனமாக காரை ஓட்டி வந்துள்ளார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று கூட்டத்திற்குள் நுழைந்த கார் மக்கள் மீது கோர விபத்தை ஏற்படுத்தியது . இச்சம்பவத்தில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், சவூதி அரேபிய மருத்துவரை கைது செய்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.