கோவை அருகே பிளஸ் 2 மாணவன் ஓட்டி வந்த கார் ஏற்படுத்திய விபத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜின் 17 வயது மகன், நேற்று முன்தினம் அதிகாலை காரை ஓட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
Also Read : வெளுத்து வாங்கும் தொடர் மழை – முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் இதோ..!!
கோவை பீளமேடு அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி மேற்குவங்கத்தைச் சேர்ந்த அக்ஷய் வேரா (23) என்பதும் அவிநாசி சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ள நிலையில் சிறுவனின் தந்தை மற்றும் கார் உரிமையாளரான சிறுவனின் தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.