இன்டிகோ விமானத்தின் அவசரகால கதவைத் (emergency exit) திறக்க முயன்ற பயணியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த இன்டிகோ விமானத்தில், பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் இருந்த அவசரகால கதவைத் திறக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து விமான பைலட்டுக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பயணிக்கு உரிய முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆனால், அவசர கதவை (emergency exit) சேதப்படுத்தியதற்காக அந்த பயணியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும், விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள முடியாது எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இன்டிகோ விமானத்தில், அவசரகால கதவை கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதனையடுத்து, தேஜஸ்வி சூர்யா தவறுதலாக அவசரகால கதவைத் திறந்து விட்டார் எனவும் அதற்கு பிறகு அவர் இது குறித்து மன்னிப்பு கேட்டதாகவும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.