அமெரிக்காவில் பூனைக்கு கௌரவ பட்டம் வழங்கப்பட்ட சம்பவம் வியப்பையும் ஆச்சிரியத்தையும் ( Doctorate for Cat ) ஏற்படுத்தி உள்ளது .
கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக வலம் வருகிறது .
Also Read : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு..!!
அமெரிக்காவில் உள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது.
இதுமட்டுமின்றி பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது.
பூனையின் இந்த செயலை பாராட்டி மேக்ஸ் என்ற அந்த பூனைக்கு பல்கலைக்கழகம் சார்பில் ( Doctorate for Cat ) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.