BREAKING | காவிரி(cauvery) நதி நீர் தொடர்பான வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இடையீட்டு மனு செய்தார்.
அந்த மனுவில் காவிரி(cauvery) டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதால், காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
முன்னதாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசன சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அப்போது தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததது.
இதனையடுத்து 16-ந் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடதக்கது