5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி என்ற கொள்கையை ரத்து செய்துள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வகுப்புகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2 மாதங்களில் மறு தேர்வுக்கான வாய்ப்பு வழங்கப்படும் என மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மறு வாய்ப்பு வழங்கி அதிலும் தோல்வி அடைந்தால் தோலிவியடைந்த மாணவர்கள் மீண்டும் அதே வகுப்புகளில் தக்கவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள இந்த புதிய அறிவிப்பிற்கு தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.