இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சாம்சங் ஃபோன்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் 11,12,13 மற்றும் 14 ஆண்ட்ராய்டு வெர்ஷன் சாம்சங் ஃபோன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயனர்கள் அனைவரும் செக்யூரிட்டி அப்டேட்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்யவும், பிளே ஸ்டோரில் மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் மெசேஜ் மற்றும் மெயில்களில் வரும் லிங்கை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சாம்சங் ஃபோன்களில் இதுவரை இல்லாமல் நீண்ட நெடு நாட்களுக்கு பின் இது போன்ற மிக பெரிய பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.