இந்தியாவின் குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் பிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதம் ஆக உயர்த்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 2.57 சதவீத ஃபிட்மென்ட் காரணி 3.68 சதவீதமாக உயரும் பட்சத்தில் அவர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். அதாவது, இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000லிருந்து ரூ.26,000ஆக அதிகரிக்கும்.
அடிப்படை சம்பளத்தில் இருந்து 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவதால், அடிப்படை சம்பளம் உயரும் பட்சத்தில், அகவிலைப்படியும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில், 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதற்கான அறிவிப்பு குடியரசு தினத்தையொட்டி வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.