தமிழகத்தில் மற்றும் புதுவை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, தேனி, திண்டுக்கல், குமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் ,சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது