தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது:
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் 43% குறைவாக பதிவாகி உள்ளது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.