கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை முடிவடைந்ததை அடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் பிப்.17 முதல் 19-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.