தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சந்திராபாபு நாயுவின் கைதை ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்ததாக, அவர் மீது குற்றம்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடு சிஐடி குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டது.
விஜயவாடா நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான விசாரணையில், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சந்திராபாபு நாயுடுவை செப்டம்பர் 22 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உற்சாகமாகக் கொண்டாடினார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரோஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் இனி அடுத்தடுத்து ஊழல் வழக்குகளில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் ரோஜா கூறினார்