ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ( andhra cm Chandrababu Naidu ) சந்திரபாபு நாயுடு. 4வது முறையாக பதவியேற்றுள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு பதவியேற்கும் விழாவில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அத்துடன் திரைபிரபலன்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலைய்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான உருவாக்கப்பட்ட அரங்கில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. 4வது முறையாக பதவியேற்றுள்ளார்.
ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.இதையடுத்து சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி. மலர்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார் .
இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் ( andhra cm Chandrababu Naidu ) ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதிவி ஏற்று வருகின்றனர்.