இன்று சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், பழவேற்காடு மீனவர்கள் (fishermen) கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் பாய உள்ள ‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்தது.
‘சந்திரயான் 3’ விண்கலத்தில் இருக்கும் ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 01. புரபுல்சன், 02. லேண்டர், 03. ரோவர் ஆகிய முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது.
நேற்று 25½ மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில், இன்று முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ‘சந்திரயான் 3’ விண்ணில் பாய்கிறது.
அதனைத் தொடர்ந்து, இன்னும் சில மணிநேரங்களில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. முன்னதாக, இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 முயற்சி தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று சந்திரயான் – 3 விண்ணில் பாய உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் (fishermen) கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.