நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு வெற்றி இன்று வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகின் அதிசக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இந்தியா தற்போது தங்களது வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் இந்தியாவின் விண்வெளி ஆராச்சி நிலையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அன்று பிற்பகல் சரியாக 2:35 மணியளவில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது .
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக சென்றுவிட்ட‘சந்திராயன் -3’ விண்கலம் மெல்ல மெல்ல அதன் வேகத்தை குறைத்து நிலவின் தென் பகுதியில் தரையிறங்க தயாராகி வருகிறது .
இந்நிலையில் இஸ்ரோவின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு வெற்றி இன்று வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அனைத்தும் நினைத்தபடி கட்சிதமாக நடக்க வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் நீதமாக தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.