தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் நாளை 8-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கூறிய சுகாதாரத்துறை அமைச்சர்,
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களில் முகாம்கள் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தீபாவளி பண்டிகையாக இருப்பதால் பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளகாவும் இந்த சமயத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தினால் அவர்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு வேலைக்கு வரும் சூழல் உருவாகும். இது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்ற பயத்தில் சிலர் ஊசி போட பயப்படுவார்கள் என்றும் இதை எல்லாம் கருத்தில் கொண்டு மெகா தடுப்பூசி முகாமை நாளை நடத்துவதற்கு பதில் அடுத்தவாரம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என மா. சூப்பராமணியம் தெரிவித்துள்ளார்.