“அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல மரியாதை”.. – சாதித்து காட்டிய நரிக்குறவர் சமூக பெண்

நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாசிமாலை அணிவித்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி நன்றி தெரிவித்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

மாமல்லபுரம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு தீபாவளி தினமான இன்று வீட்டுமனைப்பட்டா வழங்கி அந்த சமூக மக்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னதான உணவு சாப்பிட அஸ்வினிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

அஸ்வினியின் அந்த பேட்டி காட்டுத் தீ போல பரவியது. இதனையறிந்த அமைச்சர் சேகர்பாபு அவருக்கு அருகில் அஸ்வினியை அமரவைத்து சாப்பிட்டார். அந்த புகைப்படமும் வைரலானது.

இந்த நிலையில், நரிக்குறவர் என்பதற்காக அவருக்கு உணவு மறுக்கப்படவில்லை மரியாதை மறுக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் சமூகத்திற்கு வீட்டுப்பட்டா வழங்கினார்.

வீட்டுப்பட்டாவை பெற்று பூரிப்பில் திகைத்த அஸ்வினி, முதல்வருக்கு பாசிமாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

இந்த புகைப்பட குறித்து, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது..! ‘பெரியார் – அண்ணா – கலைஞர்’ ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்! என பதிவிட்டுள்ளார்.

ஒரு சமூகத்தின் பிரச்சனையை ஒட்டுமொத்த மக்களின் குரலாய் அஸ்வினி ஒலித்திருக்கிறார் என்றார் அது மிகையாகாது. சமூக ஏற்றத்தாழ்வுகள், முற்றிலுமாக துடைத்தெறியப்படும்போதுதான் மனித சமூகத்தில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டதாக பார்க்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Total
0
Shares
Related Posts