டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கம் விலை (gold price) இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,785க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,280க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.4,739க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.37,912க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,747க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,976க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.