ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு தற்போது, 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை (gold price) இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் 5,452 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,616 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் 5,460 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து 4,466 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,728 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 4,473 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,784 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.75.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.