மே மாதம் தொடக்கத்தில் 46,000 ஆராயிரத்தை தொட்ட தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு பின்னர், 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் மாத முதல் நாளே தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் 5,645 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் 5,620 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,960 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் 4,624 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 36,992 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 4,604 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,832 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.