ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையான நிலையில், தற்போது மீண்டும் 44 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 5,520 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 5,480 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் 4,522 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,176 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ஒரு கிராம் 4489 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ஒரு சவரன் ரூ.35,912 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை அதிரடியாக ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனையாகிறது.