சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியில் இருந்த ஊழியரை முன்னாள் ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கும் தியாகராயர் நகரில் உள்ள எச்.டி.எப்.சி வங்கிக் கிளைக்குள் நுழைந்து ஊழியரை மர்மநபர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளார் .
வாடிக்கையாளர் போல உள்ளே நுழைந்து பணியில் இருந்த தினேஷ் என்பவரை அந்த மர்மநபர் வெட்டிய பின் தப்ப முயன்றபோது அங்குள்ள பிற ஊழியர்கள் அவரை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் ஊழியரான சதீஷ் என்பது தெரியவந்தது .
நந்தனத்தில் தினேஷ் மற்றும் சதீஸ் ஒன்றாக பணி புரிந்து வந்ததாகவும் . 2 ஆண்டுகளுக்கு முன் வேலையை இழந்த சதீஷ், அதற்கு தினேஷ்தான் காரணமென கூறி முன்விரோதத்தில் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிய உள்ளது.