வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் – மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து பகுதியாக செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
“அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், தெற்கு ரெயில்வே சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, மைசூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12610) வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி காட்பாடி-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) வருகிற 1-ஆம் தேதி எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : திமுக கூட்டணியில் விரிசலா? எப்போதும் மாறாது – துரை வைகோ!
அதாவது இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.