திருவள்ளூர் அருகே துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறால் சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது .
அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, தியாகராய நகர், சூளைமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, வளசரவாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது.
மின் வெட்டை கண்டித்து சில இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read : அமெரிக்காவில் இருந்து தாயகம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
இதையடுத்து சென்னையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடைபெற்று 100% மின்சாரம் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
மின்தடையால் மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்
மணலி, மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு என சென்னை முழுவதும் 100% மின்சாரம் சீராக வழங்கப்பட்டு வருவதாகவும் மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.