சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்புகளில், குறைபாடுகளை 45 நாட்களில் சரிசெய்ய கட்டுமான நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தரமற்ற முறையில் கே.பி.பார்க் குடியிருப்பு கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்பின்னர், கே.பி.பார்க் குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக ஐஐடி குழு அறிக்கை அளித்த நிலையில், இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு மீண்டும் அங்கு சிமெண்ட் பூச்சு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் உள்ள குறைபாடுளை 45 நாட்களில் சரிசெய்ய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ள தமிழக அரசு, கழிப்பறையில் பழைய பீங்கான் கோப்பைகளை எடுத்துவிட்டு புதிதாக பீங்கான் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளது.