தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மார்ச் 01 ஆம் தேதி தென் தமிழக க]டலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவித்துள்ளது.
அதே போல மார்ச் 02 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தென்காசி, மதுரை, விருதுநனர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மார்ச் 3-ல் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 01 ஆம் தேதி மற்றும் 03ஆம் தேதிகளில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.