சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதியிலும், தெற்கு வங்கக் கடல் பகுதியிலும் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாகச் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டுப் பரவலாக மழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் ஆலந்தூர், கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை குறிப்பிடத்தக்க வகையில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
அதே நேரத்தில், அடையாறில் 3.7 செ.மீ மழையும், புழலில் 2.9 செ.மீ., பெருங்குடியில் 2.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
முதலமைச்சரால் இயக்கப்பட்ட மழைநீர் வடிகால் முயற்சிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு முயற்சிகளுக்கு நன்றி, ஆலந்தூர் மற்றும் வேளச்சேரி தவிர, சுரங்கப்பாதைகள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருந்தது. இந்தப் பகுதிகளில் கூட, #GCC இன் விரைவான மீட்புக் குழுக்கள், தேங்கியிருந்த தண்ணீரை விரைவாக வெளியேற்றினர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த அத்தியாவசியப் பணிகள் மற்றும் இன்றைய முன்னேற்றங்களையும் தொடர்ந்து கண்காணித்து, உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தற்போதுள்ள வடிகால்களின் வலையமைப்பை அதிகரிக்க 876 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைப்பது மற்றும் சில பகுதிகளில் குறைந்த கொள்ளளவு கொண்ட மிகவும் பழைய செயல்படாத மழைநீர் வடிகால்களை மாற்றுவதும், வழக்கமான தூர்வாருவதும் அடங்கும். வடிகால் மற்றும் கால்வாய்கள்.எங்கள் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.